தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தென்னிந்தியத் திரையுலகத்தின், இந்தியத் திரையுலகத்தின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 2018ம் வருடம் துபாயில் அகால மரணமடைந்தார். இன்று அவருடைய 62வது பிறந்தநாள். அதை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார் அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சென்னையில் நடைபெற்ற ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
