முசாபர் அலி இயக்கத்தில், ரேகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து 1981ம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் ‘உம்ராவ் ஜான்’. அந்தக் காலத்தில் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படமாக அமைந்தது. அந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளில் ரேகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. மேலும், சிறந்த இசைக்காக முகம்மது ஜாகுர்கய்யம், , சிறந்த பின்னணிப் பாடகிக்காக ஆஷா போன்ஸ்லே, சிறந்த கலை இயக்கத்திற்காக மன்சூர் ஆகியோரும் தேசிய விருதுகளை வென்றார்கள். அந்தத் திரைப்படத்தை இந்தியத் திரைப்பட ஆவணக் காப்பகம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக நிவாரணத்தைப் பெற்று, தற்போது 4 கே தரத்திற்கு இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. 35 எம்எம் பிரிண்ட்டை வைத்து அதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உயிர் கொடுத்துள்ளார்கள். நாளை ஜுன் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
