ஆசிய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஜாக்கி சான். தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது சில நாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு பிவர்லி ஹில்ஸ் பகுதியில் ஜாக்கி சான் தங்கி இருந்த அதே ஹோட்டலில் தான் தங்கி உள்ளார். அப்போது ஜாக்கி சான்-ஐ ஹிருத்திக் ரோஷன் சந்தித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


