பாலிவுட் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், நடிப்பில் சமீபத்தில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அவர் தற்போது அவர் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் 30 திரைப்படத்தை, தனது HRX என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருந்தார்.
ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிய ஹிருத்திக், இப்போது அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து வெப் தொடர்களை உருவாக்கவுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.