இந்திய திரைப்படத் துறையில் கடந்த காலங்களில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்கள் முக்கியமான திரைப்படத் தயாரிப்பு மையங்களாக இருந்தன. பின்னர், மொழிகளின்படி தனித்தனி மாநிலங்களில் திரைப்படத் துறைக்கு தனி வளர்ச்சி ஏற்பட்டது.

தென்னிந்தியாவில் தற்போதைய சூழலில் ஐதராபாத் நகரம் திரைப்படத் தயாரிப்பில் முன்னேறி விட்டது. பல தமிழ்ப் படங்கள் இன்று ஐதராபாத்தில் படமாகிக்கொண்டு வருகின்றன. தற்போது, தமிழ்ப் படங்களின் ஆரம்ப பூஜைகள் கூட சென்னையில் நடக்காமல், ஐதராபாத்தில் நடைபெறும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.
இந்நிலையில், ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகர் அஜய் தேவ்கன், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை டில்லியில் நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், தெலுங்கானா மாநிலத்தில் திரைப்படத் துறைக்காக அனைத்து உள்கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு பெரிய ஸ்டுடியோவைக் கட்டும் திட்டம் குறித்து அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். மேலும், அந்த மாநிலத்தில் திரைப்படத் துறையை வளர்ச்சி அடைய செய்யும் முயற்சிகளில், தனது முழு ஆதரவும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.