Friday, October 4, 2024

வேட்டையனோடு மோதுகிறதா பிளாக் திரைப்படம்? #VETTAIYAN #BLACK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘பிளாக்’. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம்.சி.எஸ். ‘மாநகரம்’, ‘டாணாக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.  

சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியானதும் வைரலானது. ரிலீஸ் தேதி இதுவரை வெளியிடப்படாத நிலையில், தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

அதே நாளில், ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படமும் வெளியாக உள்ளது. சூர்யாவின் ‘கங்குவா’ படத்துடன் வேட்டையன் படம் மோதுவதாக இருந்தது ஆனால் கங்குவா ரிலீஸ் தேதி பின்னர் மாற்றப்பட்டது. இந்நிலையில் ‘பிளாக்’ படம் ‘வேட்டையன்’ படத்துடன் வெளியாகவுள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- Advertisement -

Read more

Local News