Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

ரீல்ஸ் அடிக்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிக்பாஸ் வர்ஷினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் போட்டியாளரான வர்ஷினி வெங்கட், ‛சொட்ட சொட்ட நனையுது’ படத்தில் ரீல்ஸ் மீது அதிக மோகம் கொண்டவராக, ரீல்ஸ் பைத்தியமாக, அதனால் பிரச்னையில் சிக்குபவராக நடிக்கிறார். வழுக்கை தலை காரணமாக பெண் கிடைக்காமல் அல்லாடுகிறார் ஹீரோ நிஷாந்த் ரூசோ. விக் வைத்து மறைத்து வர்ஷினியை திருமணம் செய்ய கணக்கு போடுகிறார். அடிக்கடி ரீல்ஸ் போடுவதை வாடிக்கையாக வைத்து வர்ஷினி திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் கூட ரீல்ஸ் போட்டு மாப்பிள்ளை உள்ளிட்டவர்களை கோபப்படுத்துகிறார். அந்த திருமணம் நடந்ததா? வழுக்கை தலை விவகாரம் வெளியில் தெரிந்ததா என்பதே கிளைமாக்ஸ். பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் சினிமாவுக்கு வருகிறார்கள். ஹீரோயின், மற்ற வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளில் காணாமல் போகிறார்கள். வர்ஷினி ராசி அடுத்த வாரம் தெரிந்து விடும்.

- Advertisement -

Read more

Local News