2025ல் பஹத் பாசிலின் முதல் படமாக ‘ஓடும் குதிர சாடும் குதிர’ என்கிற படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பட நிகழ்வில் பேசும்போது, ”இந்த படத்திற்காக 90 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இன்னும் இறுதி கட்டப் பணிகளை நிறைவு செய்ய 50 நாட்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் மே 16ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன” என கூறியுள்ளார்.கடந்த வருடம் ஆவேசம் திரைப்படமும் இதேபோல ஒரு சம்மர் வெளியீடாக ஏப்ரலில் வெளியாகி வெற்றி பெற்றதால் இந்த படத்தையும் சம்மர் விடுமுறையை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்றே தெரிகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158554.png)