Friday, October 18, 2024

முத்து பட வசனத்தை கெத்தாக பேசிய பகத் பாசில்… வைரலாகும் வேட்டையன் பட நீக்கப்பட்ட காட்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆஃபீஸில் சக்கை போடு போட்டு வருகின்றது. இந்நிலையில் படக்குழு படத்தின் நீளம் கருதி படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் வெளியிடப்பட்டுள்ள காட்சியில் ஃபகத் ஃபாசில் முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை பேசியுள்ளார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


- Advertisement -

Read more

Local News