Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எல்‌சியூ-ல் இணைகிறதா ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படம்! #LCU

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல், விஜய், ரஜினி போன்ற உச்ச நடிகர்களுடன் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அதோடு, லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமாக ‘பென்ஸ்’ என்ற திரைப்படம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை, லோகேஷ் கனகராஜின் கதை மூலம், ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கின்றார். இப்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன, மற்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்தச் சூழலில், இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், கைதி, லியோ போன்ற படங்களைப் போல, எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சின் சாயலில் உருவாக இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News