தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை, ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படம் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ போன்ற வெற்றி பெற்ற படங்கள் போலவே, ‘பென்ஸ்’ திரைப்படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (எல்.சி.யூ) யில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு பூஜையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், மலையாள நடிகர் நிவின் பாலி இப்படத்தில் இணைகின்றார் எனும் தகவலும் வெளியாகி இருக்கிறது.