Touring Talkies
100% Cinema

Saturday, May 3, 2025

Touring Talkies

எனக்கு முன்பே விண்வெளி நாயகன் கிரேசி மோகன் தான்… கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர், நாடக எழுத்தாளர் மற்றும் நடிகராக இருந்தவர் கிரேசி மோகன். இவர் நகைச்சுவை வசனங்களை எழுதி தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இதுவரை அவர் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். 2019ஆம் ஆண்டு அவர் காலமானார்.

கிரேசி மோகன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. இவர்கள் கூட்டணியில் உருவான, ‘மைக்கேல் மதன காமராஜ்’, ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’, ‘பம்மல் கே சம்பந்தம்’ போன்ற திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியடைந்தன.

இந்நிலையில், கடந்த கிழமை கிரேசி மோகன் எழுதிய நாடகங்கள், வசனங்கள் மற்றும் சிறு கதைகள் என மொத்தம் 25 புத்தகங்களை கொண்ட தொகுப்பை வெளியிட்டனர். இதில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் கூறியதாவது, “நானும் கிரேசி மோகனும் வெவ்வேறு வீடுகளில் பிறந்த இரு சகோதரர்கள். நாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தினம் தோறும் பேசிக் கொள்ளுவோம். நானும் அவர் செய்த கதைகள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன. எனக்கு முன்னதாக வின்வெளி நாயகனாக மாறியவர் மோகன் அண்ணா தான். அவர் என்னை விட்டு முதலில் சென்றார். அனைவரும் ஒருநாள் போய் தான் செல்ல வேண்டும். எதாவது டிராமா பார்க்க வேண்டும் எனில், அங்கு வந்து பாருங்கள்” என்று மிகவும் நகைச்சுவையாக கூறினார்.

- Advertisement -

Read more

Local News