Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

நடிகைகளுக்கு அழகு மட்டுமே போதுமானது அல்ல- நடிகை டயானா பென்டி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டில் வெளியான ‘சாவா’ மற்றும் ‘ஆசாத்’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகை டயானா பென்டி, சமீபத்தில் சில சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, திரைப்படத்துறையில் பெண்கள் நடத்தப்படுவது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திரையுலகில் திறமைமிக்க நடிகைகளை விட, அழகான நடிகைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் நிலை காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டார். மேலும், தன்னிடம் தற்போது 30 வயதுதான் இருந்தாலும், பல குழந்தைகளின் தாயாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்பதில் கவலை தெரிவித்தார்.

அதோடு அவர் மேலும் கூறுகையில், ‘‘நடிகைகள் தங்களது அழகுக்காக பாராட்டப்படுவது நல்லதே. ஆனால் அதுவே போதுமானதல்ல. ஒரு நடிகையாக, அழகுடன் சேர்த்து, தங்களது நடிப்பு திறமைக்கும் பாராட்டு கிடைக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்றார்.தற்போது டயானா, ‘டூ யூ வான்னா பார்ட்னர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அவருடன் தமன்னா, ஜாவேத் ஜாப்ரி, நகுல் மேத்தா, ஸ்வேதா திவாரி மற்றும் நீரஜ் கபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை கோலின் டி’குன்ஹா மற்றும் அர்ச்சித் குமார் இணைந்து இயக்கியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News