சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ம் ஆண்டு திரைப்பயண விழா நடந்தது இதில் பங்கேற்று பேசிய மிஷ்கின் மிகவும் எமோஷனலாக இயக்குனர் பாலா குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் ஒநாயும் ஆட்டுக்குடியும்’ படம் பார்த்த பிறகு, பாலா என்னை அழைத்தார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. பாலா அழுததை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆனால், அன்றைய தினம் அவர் அழுதார். என்னிடம் மது அருந்தலாமா என்று கேள்வி கேட்டார். பின்னர், நான் தயாரிக்கும் படத்தில் நீ இயக்குவாயா என்று கேட்டார். அந்த தருணத்தில் எனக்கு வாழ்க்கையை கொடுத்தவர் பாலாதான்.
பாலா எனும் கலைஞனை நாம் நேசிக்க வேண்டும். ராஜிவ் மேனன் சார் ஒரு ஸ்டூடியோவுக்கு போயிருக்கார். அங்க 30 செருப்புகள் வெளில இருந்திருக்கு. அந்த செருப்புக்கு நடுவுல ஒருவர் அயர்ச்சியில படுத்திருக்கார். அவர் யார்னு ராஜீவ் மேனன் கேட்டிருக்கார். அந்த செருப்புகளுக்கு நடுவுல படுத்திருந்தவர்தான் ‘சேது’ எனும் படைப்பை நமக்கு கொடுத்தவர்.