தமிழ் சினிமாவில் ‘சேது’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. திரையுலகில் 25 வருடங்களைக் கடந்த அவருக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் அவர் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, சேது படம் என்னை மிகவும் பாதிதங. ஒரு நடிகர் இப்படிப்பட்ட நடிக்க முடியுமா? ஒரு இயக்குநர் இப்படியாக ஒரு படத்தை உருவாக்க முடியுமா என எண்ணும்போது, அந்த படத்தின் தாக்கம் என் மனதில் 100 நாட்கள் நீடித்தது. 2000ஆம் ஆண்டில் நெய்காரன்பட்டியில் ஷூட்டிங்கில் இருந்தபோது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், அடுத்தப் படத்தில் உன்னை ஹீரோவாக வைத்து பணியாற்றுவேன் என்று பாலா சார் சொன்னார். அவருடைய அந்த ஒரு வார்த்தை என் வாழ்க்கையை முழுவதும் மாற்றியது.
மேலும், நந்தா படத்தை பார்த்த பிறகு, கௌதம் என்னை காக்க காக்க படத்திற்கு அழைத்தார். அதன் பின்னர், முருகதாஸ் சார் என்னை அழைத்தார். இப்படியான அடுத்தடுத்து வெற்றி படங்களுக்கும் வாய்ப்புக்களுக்கும் காரணம் பாலா அண்ணன்தான் என்றுள்ளார்.