விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லி. அதன் பின்னர், ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி 1000 கோடி வசூலை குவித்த இவர், விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்காக பேபி ஜான் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் புதிய படத்தின் தொடர்பாக அட்லி கூறுகையில், “பேபி ஜான் படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் இந்தப் படத்தை காளீஸ் இயக்கியுள்ளார்.
பேபி ஜான் படம் தெறி படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும், அதை முழுமையான ரீமேக் என்று அழைக்க முடியாது. இது தெறி படத்தினை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.