நடிகர் ஜெய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான அன்னபூரணி படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெய், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக பிரக்யா நக்ரா நடிக்கின்றார்.
மேலும், இந்தப் படத்தில் சத்யராஜ், யோகி பாபு, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், ஆனந்த் ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்துக்கு பேபி அண்ட் பேபி என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளராக டி. இமான் பணியாற்றுகிறார்.
குடும்ப சென்டிமென்ட் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்யத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.