Touring Talkies
100% Cinema

Monday, August 18, 2025

Touring Talkies

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குனர் சிதம்பரம் இயக்கும் ‘பாலன்’… வெளியான அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றி படத்தை இயக்கிய சிதம்பரம் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பாலன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது.இப்படத்தின் மூலம் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது. இப்படம் மலையாளம் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேவிஎன் நிறுவனம் யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’, விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’, ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் போன்ற பெரிய படங்களையும் தயாரித்து வருகிறது. ‘பாலன்’ தலைப்புக்கு ஏற்ப, படம் அம்மா–மகன் உறவை மையமாகக் கொண்ட கதை என கூறப்படுகிறது. இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படத்தின் கதாசிரியர் ஜீத்து மாதவன் இந்த படத்துக்கும் கதை எழுதியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News