இயக்குனர் கிருஷ்ண பலராம், நடிகை பிரீத்தி அஸ்ராணியை வைத்து ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் முகேன் ராவ், தான்யா ஹோப் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்மேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் வகை படமான இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ்ண பலராம் கூறுகையில், “பச்சோந்தி போல் மாறும் மனிதர்களின் பல்வேறு நிறங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் ‘நிறம்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் கதை அனைத்து மொழி பார்வையாளர்களுக்கும் பொருந்தும் என்பதால் பன்மொழி படமாக உருவாக்கியுள்ளோம். எல்லா மொழி ரசிகர்களும் இதை வரவேற்பார்கள்,” என்றார்.