உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் 2009ம் ஆண்டு வெளியானது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்தப் படம் வரவேற்பிலும், வசூலிலும் இதுவரை வெளியான படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இதன் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆப் வாட்டர் 2022ம் ஆண்டு வெளியானது. இதுவும் வசூல் சாதனை படைத்தது. முதல் பாகம் காடுகளின் பின்னணியிலும், இரண்டாம் பாகம் நீரின் பின்னணியிலும் இருந்தது. தற்போது இதன் 3ம் பாகம் அவதார் பயர் அண்ட் ஆஷ் என்ற தலைப்பில் வெளிவருகிறது. இது நெருப்பின் பின்னணியில் உருவாகி உள்ளது. வருகிற டிசம்பர் 19ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதி ‘அவதார் : தி வே ஆப் வாட்டர்’ படத்தை மறு வெளியீடு செய்கிறது.அவதார் படம் வெளிவருதற்கு முன்பு அதன் முந்தைய படத்தை மறு வெளியீடு செய்வது ஜேம்ஸ் கேமரூனின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
