பிரபலமான கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர், இந்திய சினிமாவில் கவர்ந்த நடிகை. அவர் மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். தனது காதலனுக்கு கண் வழியே பருவ காதலை வெளிப்படுத்தும் அந்த புகழ்பெற்ற காட்சி வைரலாகி பிரியாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
திருச்சூரில் பிறந்த பிரியா பிரகாஷ் அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர், “Thanaha” மலையாள படத்தில் நடித்தார். அதன் பின்னர் “Oru Adaar Love” படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். 2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்டவராக மாறிய பிரியா, தெலுங்கில் “செக்”, “இஷாக்” உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவரது வாய்ப்பு பரவியது.
தொடர்ந்து வெளிநாடுகளில் விடுமுறையை கழித்து புகைப்படங்களை பகிர்வது இவரின் பழக்கம். சமீபத்தில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி கையில் தாமரைப்பூ வைத்துக் கொண்டு கிளாமரான ஆடையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். இவை சமூக ஊடகங்களில் லைக்குகளைப் பெற்று வைரலாகியுள்ளது.