நடிகர் அதர்வா ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவர் ‘பராசக்தி’, ‘டிஎன்ஏ’, ‘இதயம் முரளி’ ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களில் டிஎன்ஏ விரைவில் வெளியாகவுள்ளன.
அதேபோல் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் ‘தணல்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அஸ்வின், லாவண்யா, பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தணல்’ படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், அதர்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன், படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாவது உறுதியாகியுள்ளது.