இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளராக உள்ள டிஜோ டாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதர்வா ‘டி.என்.ஏ’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.