நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பால் கவனம் பெற்றவர். தற்போது அவர் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார். தற்போது கென் கருணாஸ் இயக்கியும், கதாநாயகனாகவும் நடிக்கும் தனது புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இன்று அதிகாரப்பூர்வமாக இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் அடுத்த அப்டேட் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.
முழுமையாக பள்ளி பருவத்தை மையப்படுத்தி உருவாகும் ஒரு ஜாலியான, நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது அமையும் என கூறப்படுகிறது.