கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு சினிமாவில் பெரும் புகழ் பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் ‘சுல்தான்’, ‘வாரிசு’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “கன்னட சினிமாவில் அறிமுகமானாலும், என்னை உருவாக்கியது தெலுங்கு திரையுலகம்தான்” என்று கூறியிருந்தார். இந்த கருத்து கன்னட ரசிகர்கிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதனால் கன்னட படங்களில் ராஷ்மிகாவை நடிக்க வைக்கக் கூடாது என சில கன்னட அமைப்புகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு, “கூர்க் பழங்குடி இனத்திலிருந்து திரைப்படத்தில் நடிக்க வந்த முதல் நடிகை நான்தான்” என்று அவர் கூறியதற்கும் எதிர்ப்பு எழுந்தது. ஏற்கனவே அந்த இனத்திலிருந்து பலர் கலைத்துறையில் சாதித்து வந்துள்ளதாக பலரும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த நேர்காணலில் ராஷ்மிகா இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “தொழில்முறை விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் தனிப்பட்ட அவதூறுகள் தவறு. நாம் திருத்திக் கொள்ள வேண்டியதைச் சொன்னால் அதை மனதில் கொண்டு மாற்றிக்கொள்வோம். யார் எனக்கு தடை விதிக்கிறார்களோ, அவர்களிடம் சென்று ‘ஏன் தடை விதிக்கிறீர்கள், நான் என்ன தவறு செய்தேன்?’ என்று கேளுங்கள்” என்று தெரிவித்தார்.