Touring Talkies
100% Cinema

Thursday, May 8, 2025

Touring Talkies

மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி… ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இசைஞானி இளையராஜா ட்வீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏப்ரல் 22-ந்தேதி, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பதிலடி , இந்தியா இன்று பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், எல்லைப் பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் இந்த தைரியமான நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர். திரையுலகத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கங்கள் வழியாக இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா, “மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News