பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகளான கல்யாணி பிரியதர்ஷன், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரை முன்னிலைப்படுத்தி வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதே நேரத்தில், பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா, தொடக்கம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதையொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இயக்குநர் பிரியதர்ஷன், சிறு வயதில் விஸ்மயாவும் கல்யாணியும் குழந்தைகளாக இருந்தபோது எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த இரண்டு குழந்தைகளையும் நான் என் கைகளில் தூக்கி வளர்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு நாங்கள் ஒரே குடும்பமாக இருந்தோம். மோகன்லால் சொன்னது போல, நாங்கள் சினிமாவில் நுழைவோம் என்று ஒருபோதும் நினைத்ததில்லைy
கல்யாணியும் சிறந்த தொடக்கத்தைப் பெற்றுள்ளார். அதேபோல் மாயாவின் முதல் படமும் அழகானதாக அமையும் என நம்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும், மாயா,” என்று குறிப்பிட்டிருந்தார். தந்தையின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்த கல்யாணி, விஸ்மயாவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இந்த பதிவை பார்க்கும் வரை என் அப்பாவுக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு இருக்கிறது என்பதே எனக்கு தெரியாது என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

