நடிகர் தனுஷ் நடிகராகவும் இயக்குநராகவும் மிகவும் திறமையான முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். அவருடைய இயக்கத்தில் நான்காவது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மக்களிடையே இப்படத்தின் கதைக்களம் குறித்து ஆவல் அதிகரித்துள்ளது. இதில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
‘இட்லி கடை’ அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். அதில் அறிவு ராப் பாடியுள்ளார். மேலும், அருண் விஜய் ‘அஷ்வின்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.