Saturday, January 25, 2025

ரெட்ட தல படத்தின் டப்பிங்-ஐ நிறைவு செய்த அருண் விஜய்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘ரெட்ட தல’. சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் தனது பெயருடன் கிரிஷ் என்ற பெயரை இணைத்து கிரிஷ் திருக்குமரன் என இப்படத்தை இயக்கி வருகிறார்.

அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி 2’ படத்தை வெளியிட்ட பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. கோவா, புதுச்சேரி, தரங்கம்பாடி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு முடிவடைந்தது.

தற்போது, இப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை அருண் விஜய் முடித்துள்ளார். படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News