குட்டிப்புலி”, “கொம்பன்”, “மருது” போன்ற கிராமத்து கதையம்சங்களைக் கொண்ட வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா, தற்போது அருள்நிதியை முன்னணி கதாநாயகனாக கொண்டு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157920.png)
இந்தப் படத்தில் அருள்நிதி, குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் ரியலாஸ்டிக் ஆக தோன்றுவதற்காக, அவர் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு, உடல் எடை அதிகரித்து, தனது கேரக்டருக்கேற்ப தயாராகியிருக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157921.jpg)
இந்தப் படத்தில், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார், மேலும் ஹரீஷ் பேரடி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகர் மேற்கொள்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறதாம்.விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடைசியா அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.