‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அர்ஜூன் தாஸ், தற்போது ‘அநீதி’ மற்றும் ‘ரசவாதி’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில், அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்ததின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ஹேஷம் அப்துல் வாகப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் மலையாளத்தில் ‘ஹ்ரிதயம்’ மற்றும் தெலுங்கில் ‘குஷி’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வெற்றி பெற்றார். தற்போது தமிழில் இவர் அறிமுகமாகி உள்ளார்.