ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீயவர் குலைநடுங்க’. இந்த படத்தில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ புகழ் அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளர் மற்றும் நடிகரான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஓ.ஏ.கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவை சரவணன் அபிமன்யு மேற்கொண்டிருக்கிறார். இசையமைப்பை பரத் ஆசிவகன் செய்துள்ளார்.

இயக்குநராக அறிமுகமாகும் தினேஷ் லட்சுமணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கிரைம் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதியைப் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கின்றன.