நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் வெற்றியை பெற்றது.

இப்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா உள்ளிட்டோர் இந்த இரண்டாம் பாகத்திலும் இணைந்து நடித்துவருகின்றனர். மேலும், முதல் பாகத்தில் கேமியோ வேடங்களில் நடித்த சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலும் இந்த தொடர்ச்சிப் படத்திலும் மீண்டும் இடம்பெறுகின்றனர்.
இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை வித்யா பாலனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக வில்லனாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடிக்கிறார் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தின் மூலம் முன்பே அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

