Touring Talkies
100% Cinema

Wednesday, June 11, 2025

Touring Talkies

ரவி மோகன் நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தில் இத்தனை கதாநாயகிகள் நடிக்கிறார்களா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரவி மோகன் தற்போது ணேஷ் கே. பாபு இயக்கத்தில் “கராத்தே பாபு” என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதேபோல், சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்குப் பிறகு, “டிக்கிலோனா” மற்றும் “வடக்குப்பட்டி ராமசாமி” போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடியான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு “ப்ரோகோட்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் நடிக்கவிருக்கும் கதாநாயகிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களது பெயர்கள் மற்றும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News