Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

முடிவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு திருமண வாழ்க்கை… அதிர்ச்சியிலும் சோகத்திலும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கார் விருது வென்ற சிறப்பு பெற்றவர். கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இன்றும் மிகவும் பிஸியாக செயல்பட்டு வருகிறார். 1995ஆம் ஆண்டில் சாய்ரா பானுவை திருமணம் செய்த, 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை கடந்த அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அவரது வக்கீல் வெளியிட்ட அறிக்கையில், “பல ஆண்டுகள் திருமண வாழ்வில் இருந்த பின்பு, சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு, தங்களுடைய உறவினுள் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வ அழுத்தங்களின் விளைவாக எடுக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதியருக்குள் சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியதாகவும், இந்த இடைவெளியை யாராலும் சரி செய்ய முடியாததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஹ்மானை பிரிவது சாய்ரா பானுவுக்கு மிகவும் சோகமான முடிவு. அவர்களின் தனிப்பட்ட சவாலான காலகட்டத்தை மக்கள் மதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து செய்ததாக அறிவித்த நிலையில், தற்போது ரஹ்மான் பற்றிய இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News