இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், தமிழ்த் திரைப்படத் துறையிலும் உலகளவிலும் புகழ்பெற்ற இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இசை வேலைகளுக்காக அடிக்கடி அமெரிக்கா செல்லும் அவர், தற்போது அங்கு பயணித்துள்ளார். அந்த பயணத்தின் போது மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாசை சந்தித்த சம்பவத்தை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

“எனது சிறுவயதில் இருந்தே நான் அவருக்குப் பெரிய ரசிகன். அவரை டல்லாஸில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. அவரது இசை ஆராய்ச்சி பணிகளும், இந்திய பாரம்பரியமான கர்நாடக இசையின் மீது அவருடைய ஆழ்ந்த ஆர்வமும் எனக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,” என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் இசையில், ‘பச்சைக் கிளிகள் தோளோடு’ மற்றும் ‘நெஞ்சே நெஞ்சே’ போன்ற பாடல்களை ஜேசுதாஸ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.