Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

அடுத்த வருடம் கோடையை குறிவைத்த அனுஷ்கா நடித்துள்ள காதி திரைப்படம்…ரிலீஸ் தேதி வெளியீடு! #Ghaati

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறினார். ஆனால், அதன் பின்னர் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக போகவில்லை. கடைசியாக, கடந்த ஆண்டு அவர் நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிசிட்டி என்ற படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

தற்போது, மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துவரும் அனுஷ்கா, கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் ‛காதி’ என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே, இந்த திரைப்படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில், அனுஷ்கா மிகவும் கொடூரமாக கயவனை கொல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 2025 ஏப்ரல் 18-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக வீடியோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News