Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அனுஷ்கா நடித்துள்ள ‘காட்டி’ பட இயக்குனருக்கு நடந்த திடீர் திருமணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் கிரிஷ். ‘கம்யம்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அதன் பிறகு கஞ்சே, கொண்ட பொலம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையான என்.டி.ஆர். கதாநாயகடு உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கினார்.
தற்போது அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘காட்டி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அதிரடி திரில்லர் படமாக உருவாகிறது.கிரிஷ் ஏற்கனவே ரம்யா என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். தற்போது பிரீத்தி சல்லா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து உள்ளார். திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News