அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ள ‘காட்டி’ திரைப்படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் இப்படம் வெளியாகும் எனக் கூறிய படக்குழு, பின்னர் ஜூலை 11ம் தேதியை வெளியீட்டு தேதியாக அறிவித்திருந்தது. ஆனால், சில காட்சிகள் சரியாக அமையவில்லை என்று கருதி, இயக்குநர் அதனை மீண்டும் படமாக்க உள்ளதாகவும் அதேசமயம் விஎப்எக்ஸ் பணிகளும் முடியாமல் உள்ளதென வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ‘காட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த பணிகளும் காட்சிகள் குறிப்பாக விஎப்எக்ஸ் பணிகள் முழுமையாக முடிந்து, அமேசான் பிரைமில் வெளியீட்டு தேதி உறுதியாக அமைந்த பிறகு தான், படக்குழு புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.