Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள GHAATI படத்தின் படப்பிடிப்பு நிறைவு… விரைவில் ரிலீஸாகும் கிளிம்ஸ் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பேய்த் திரைப்படமான ‘அருந்ததி’யில் நடித்து பிரபலமான அனுஷ்கா ஷெட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்காவின் திரை வாழ்க்கையில் ‘பாகுபலி’ மிக முக்கியமான படமாக அமைந்தது.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இதில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். மகேஷ்பாபு பச்சிகொலா இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பு பெற்று, வசூலிலும் வெற்றி கண்டது. தற்போது, அனுஷ்கா ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘காதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனுஷ்கா நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேடம்’ படத்தையும் கிரிஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில், ‘காதி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்து, ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகை அனுஷ்கா தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார். அந்த நாளில் படக்குழு ‘காதி’ படத்தின் புதிய தகவலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News