கடந்த ஆண்டு தமிழ் திரைப்பட உலகில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘மகாராஜா’. இந்தியாவை தாண்டி சீனாவில் வெளியாகிய இப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இயக்குநர் நிதிலன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “சமீபத்தில் மும்பையில் அனுராக் காஷ்யாப் மகளின் திருமணத்தில் அவரை சந்தித்தேன்.

அப்போது அவர் என்னிடம், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜாண்ட்ரோ தன்னை அவரது படத்தில் நடிக்க அழைத்ததாகவும், அதன் காரணம் ‘மகாராஜா’ படம் தான் என்றும் கூறினார். இதை கேட்டு நான் என்ன பேசுவது என்று தெரியாமல், மிகுந்த மகிழ்ச்சியில் ஆழந்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.