தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்துத் தன்னை ஒரு பன்மொழி நடிகையாக நிலைநாட்டியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் தனுஷ் நடித்த ‘கொடி’ மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனுடன், பிரணீஷ் விஜயன் இயக்கிய ‘தி பெட் டிடெக்டிவ்’ என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஷராபுதீன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நகைச்சுவை கலந்த த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 16ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.