‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பின்னர், அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குநர் அட்லீயுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இயக்குநர் அட்லீ, தற்போது இயக்கவுள்ள இந்த புதிய படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் அட்லீயை நேரில் சந்தித்து, இந்த புதிய திரைப்படம் குறித்து விவாதிக்க அல்லு அர்ஜுன் சென்னை வந்திருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் எனக்கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாளை வெளியாகிறது. குறிப்பாக நாளை அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய படத்என எதிர்பார்க்கப்படுகிறது.