ஜெயிலர்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குநர் த செ ஞானவேலின் “வேட்டையன்” படத்தில் நடித்துள்ளார். இன்று ரிலீஸாகியுள்ள இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் இன்று பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இன்று காலை சென்னை தேவி திரையரங்கில் விஜய் வேட்டையன் படத்தைப் பார்த்துள்ளார் என்றும் மேலும் இயக்குனர் வெங்கட்பிரபுவுடம் இத்திரைப்படத்தை பார்த்தார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் திரையரங்குக்குள் செல்லும் புகைப்படம், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, மீண்டும் காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதேபோல் நடிகர் தனுஷ், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிருத், ரித்திகா சிங், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட பல பிரபலங்களும், மக்களோடு இணைந்து, வேட்டையன் படத்தை கண்டுகளித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.