அஸ்வின் குமார் இயக்கத்தில், ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் வெளிவந்த கேஜிஎப், காந்தாரா போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்தவர் சாம். சிஎஸ்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படம் இதுவரை 175 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக, அந்நிறுவனம் எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட போஸ்டரில் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் வெளியான அனிமேஷன் படங்களில் 100 கோடி ரூபாயை கடந்த முதல் படமாகவும் இது சாதனை படைத்துள்ளது. மேலும் தற்போது வரை சுமார் 210 கோடி இப்படம் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.