Monday, October 14, 2024

நட்டி நட்ராஜ் இரட்டை வேடங்களில் நடிக்கும் ஆண்டவன் அவதாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நட்டி என்கிற நட்ராஜ் முன்னணி ஒளிப்பதிவாளராகப் பெயர் பெற்றவர். பின்னர் அவர் நடிகராக மாறி ‘நாளை’, ‘சக்கர வியூகம்’, ‘மிளகா’, ‘முத்துக்கு முத்தாக’, ‘சதுரங்க வேட்டை’, ‘கதம் கதம்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘கர்ணன்’, ‘மகாராஜா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வெளிவரவிருக்கும் ‘பிரதர்’ படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், அவர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் ‘ஆண்டவன் அவதாரம்’. இதற்கு முன்பு ‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘சாலை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சார்லஸ், தனது ‘லைட் சவுண்ட் அன்ட் மேஜிக்’ நிறுவனத்துக்காக இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் ராகவ் நடிக்க, ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். நவ்னீத் மற்றும் ராகவ் இசையமைக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் சார்லஸ் கூறுகையில், “இப்படத்திற்கு ‘அவதாரம்’ என்று பெயரிட நினைத்தேன். ஆனால் அந்த டைட்டில் நாசரிடம் இருந்ததால் ‘ஆண்டவன் அவதாரம்’ என பெயரிட்டேன். நட்டி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தந்தை-மகன் அல்லது அண்ணன்-தம்பி வேடமாக இருக்காது. இது சயின்ஸ் பிக்ஷன் எனினும், நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட படம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News