நடிகர் விக்ரமின் 63வது திரைப்படத்தை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், படத்தின் கதைக்கு சிறப்பாக இருந்தாலும் மிகப்பெரிய பட்ஜெட் செலவாகும் என்பதால் மடோன் அஸ்வின் ‘சியான் 63’ ல் இருந்து விலகியதாகவும், மேலும் சியான் 63 படத்துக்கு வேறொரு நல்ல கதையை வைத்துள்ள இயக்குனரை பட தயாரிப்பு நிறுவனம் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது சியான் 63 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அருண்விஸ்வா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சியான் 63’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
விக்ரம் ரசிகர்கள் என்னிடம் ஏன் எந்த அப்டேட்களும் கொடுக்கவில்லை என தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்கள். எல்லா அப்டேட்களும் சரியான நேரத்தில் வெளியிடப்படும். இந்தப் படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.