மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மண்டாடி’. இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்த நேரத்தில், கேமரா பொருத்தப்பட்டிருந்த படகு திடீரென கடலில் சமநிலை இழந்தது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ‘ரெட்’ கேமரா கடலில் மூழ்கியது. கூடுதலாக சில படப்பிடிப்பு உபகரணங்களும் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்வேளையாக எந்த மனிதருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு கடலிலும் கடற்கரை பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் இந்த படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டு வருகிறார்.