Touring Talkies
100% Cinema

Saturday, May 10, 2025

Touring Talkies

நான் ஒரு நடிகை என்பது முதலில் எனது கணவருக்கு தெரியாது0- நடிகை அமலாபால் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மைனா’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பியவர் நடிகை அமலா பால். அந்த படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவரது குறிப்பிடத்தக்க படமாக ‘ஆடை’ இருந்தது. அதன் பின்பு மலையாள நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்தார்.

2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலா பால், தற்போது அவருடன் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குப் பிறந்த ஒரு மகனும் இருக்கின்றார். சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அமலா பால் தனது கணவர் ஜகத் தேசாயைப் பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “முதன்முறையாக நாங்கள் கோவாவில் சந்தித்தோம். அவர் குஜராத்தியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோவாவில் தான் வாழ்ந்து வந்தார். அவருக்கு தென்னிந்திய திரைப்படங்களைப் பார்ப்பது என்பது பழக்கமாக இருக்கவில்லை.

அதனால் நான் ஒரு நடிகையாக இருப்பதையும் அவருக்கு தெரியாது. நானும் அது பற்றி அவரிடம் எந்த விதமான தகவலும் பகிரவில்லை. சில நாட்கள் கழித்துதான் அவர் அதை புரிந்துகொண்டார். நான் கர்ப்பமாக இருக்கும்போது தான், அவர் என்னுடைய படங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். விருது நிகழ்ச்சிகள் அவரது விருப்பமானவை. நான் விருது விழாவில் கலந்து கொண்டு விருது பெறுவது, ரெட் கார்ப்பட்டில் நடப்பது போன்றவைகளை அவர் மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்தார்,” என கூறியுள்ளார் அமலா பால்.

- Advertisement -

Read more

Local News