கன்னட திரையுலகில் முக்கிய நடிகையாக உள்ளவர் மேக்னா ராஜ். இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா உடல்நல குறைவால் காலமானார். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

தற்போது மேக்னா ராஜ்க்கு ஒரு மகன் இருக்கிறார். இளம் வயதில் கணவரை இழந்த நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகை மேக்னா ராஜ் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் உள்ள புகைப்படத்தைக் பகிர்ந்து, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு வேண்டும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம், அவர் எப்போது இருந்தாலும் சிரஞ்சீவி சர்ஜா தான் தனது வாழ்க்கைத் துணை என்ற முடிவில் நிலைத்து இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தற்போது அவர் சில கன்னட படங்களிலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.